The Power of the Dog (2021) (Netflix) - தமிழ் விமர்சனம்.

The Power of the Dog (2021) (Netflix)

(தமிழ் அறிந்த பெரும் மக்கள் அனைவருக்கும் வணக்கம்.)

(Spoiler Alert)

இந்த திரைப்படத்தின் கதை ஒரு புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. புதினத்தின் தலைப்பும் , திரைப்படத்தின் தலைப்பும் ஒன்றேதான். கதை நடக்கும் காலகட்டம் 1925. குறிப்பாக மாட்டுப் பண்ணை உரிமையாளர்களாகச் சகோதரர்கள் இருவர். அதில் ஒருவர் ஜார்ஜ் , இரண்டாமவர் பில். இந்த பில் உக்கிரமான ஆசாமி. ஜார்ஜ் , ரோஸ் என்ற பெண்ணை மணத்துக் கொள்கிறான். அவளுக்கு ஒரு மகன் ஏற்கனவே இருக்கிறான். அவன் மருத்துவம் படிக்கிறான். அவன் பெயர் பீட்டர். இந்த இடத்தில் பில் , ரோஸை ஒருவகையான மிரட்டல் தொனியில் கையாளுகிறான். அதாவது உளவியல் ரீதியாகச் சீண்டுதல் எனக் கொள்க. பில்லின் இந்த போக்கு என்ன முடிவைத் தொட்டது என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதி கதை.

முதல் விஷயம், மார்வெல் துரித உணவகத்தில் டாக்டர் ஸ்டேர்ஞ்சாக நடித்திருந்த பெனடிக்ட் கம்பெர்பாட்ச் தான் பில் லாக நடித்திருப்பார். கதாபாத்திரத்தில் கச்சிதமாக இருப்பார். வேகமாகப் படம் பார்க்கப் போகலாம் என்று நினைக்கும் ☺️ மார்வெல் பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை நீங்கள் நினைக்கும் அதிரடி படம் அல்ல இது. இது மிக நுண்ணிய விசயங்களைத் தொட்டுச் செல்லும் நாடக பாணி (Drama) திரைப்படம். படம் முடியும்போதுதான் எனக்கு " ஓ... இதுதான் விஷயமா" என்று புரிந்தது. ஆக மார்வெல் ரசிகர்களுக்கு ஏற்றதல்ல.

மற்றுமொரு கதாபாத்திரம் நம்மைக் கவரும். அதையும் படம் முடியும்போதுதான் உணர்வீர்கள். திரைப்படத்தின் கலை நுணுக்கங்களை ஆய்ந்து படம் பார்த்தால் மட்டுமே இது போன்ற திரைப்படங்களை ரசிக்க முடியும். இந்த கதையில் மைய முரண்கள் (உளவியல் சார்ந்து) மிக நேர்த்தியாகக் கதாபாத்திரங்களில் வெளிப்பட்டிருக்கும். கமர்ஷியல் பட ரசிகர்களுக்கு "என்னடா படம் இது" என்ற சலிப்பை மட்டும் கொடுக்கும். ஆனால் திரைப்படங்களை நுட்பமாகப் பார்க்கும் ஆசாமிகளுக்கு " நல்ல படம்" என்ற உணர்வைக் கொடுக்கும்.  மேலும் ஒளிப்பதிவு அட்டகாசம். மேலும் தென்றல் காற்றில்,  புயலை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த இயக்குநரின் ஆளுமை சிறப்போ சிறப்பு.


அழகான தாழம்பூவில் சிறு நாகத்தின் விஷத்தை உணர விரும்பும் நாடக பாணி (Drama) திரைப்பட ரசிகர்களுக்கு மட்டும் பரிந்துரைக்கிறேன்.

directed by Jane Campion.

based on the 1967 novel (The Power of the dog) by Thomas Savage.

நடிகர்கள்:

Benedict Cumberbatch as Phil Burbank

Kirsten Dunst as Rose Gordon

Jesse Plemons as George Burbank

Kodi Smit-McPhee as Peter Gordon

Thomasin McKenzie as Lola


https://www.netflix.com/us/title/81127997?s=a&trkid=13747225&t=cp&vlang=en&clip=81555523


Referral link : Start watching all the same great TV shows and movies as I am.


https://www.netflix.com/in/n/0858e62b-fe59-4988-b824-a95249814477