காமிக்ஸ் தாகம்!
வணக்கம் நண்பர்களே!
காமிக்ஸ் அல்லது சித்திர கதை வகை புத்தகங்களின் மீது குழந்தைகளுக்கு அலாதி பிரியம் உண்டு. என் சிறு வயதிலும் ராணி காமிக்ஸ் எனக்கு பிடித்தமான ஒன்று. பிறகு கொஞ்சம் , கொஞ்சமாகத் தமிழில் வெளிவரும் பிற காமிக்ஸ் நிறுவனங்களின் கதைகளும் எனக்குப் படிக்கக் கிடைத்தன. குறிப்பாக லயன், முத்து நிறுவனத்தின் காமிக்ஸ் கதைகளைச் சொல்லலாம். இப்போதும் லயன் , முத்து காமிக்ஸ் நிறுவனம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பது மகிழ்வான விடையம். டெக்ஸ் வில்லர் தொடங்கி லார்கோ வரை பல ஐரோப்பிய காமிக்ஸ் கதைகள் இவர்களால் (லயன், முத்து) நமக்குப் படிக்கக் கிடைக்கிறது. இருந்தும் நம் காமிக்ஸ் தாகம் அடங்குவதாகத் தெரியவில்லை. அதனால் என்னால் முடிந்த சிறு பணியாக "Public domain" காமிக்ஸ் கதைகளை மொழிபெயர்ப்பு செய்து இந்த தளத்தில் பதிவேற்ற எண்ணம் கொண்டுள்ளேன்...
இந்த முயற்சியின் முதல் கதையாக Dell publishing நிறுவனத்தின் Tonto (டான்டூ) கதை ஒன்றை மொழிபெயர்ப்பு செய்துகொண்டு உள்ளேன். மாதிரியாக ஒரு பக்கம் உங்களுக்காக…
மாதம் ஒரு கதை என்பது என் இலக்கு. நான் உங்களிடம் எதிர்பார்ப்பது உங்களின் ஆதரவு மட்டுமே. நான் வெளியிடும் கதைகளை நீங்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...
கதை முழுவதையும் மொழிபெயர்ப்பு செய்துவிட்டு இந்த வலைப்பூவில் உங்களைச் சந்திக்கிறேன் . நன்றி
- காமிக்ஸ் பாண்டியன்.