The Power of the Dog (2021) (Netflix) - தமிழ் விமர்சனம்.
The Power of the Dog (2021) (Netflix) (தமிழ் அறிந்த பெரும் மக்கள் அனைவருக்கும் வணக்கம்.) (Spoiler Alert) இந்த திரைப்படத்தின் கதை ஒரு புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. புதினத்தின் தலைப்பும் , திரைப்படத்தின் தலைப்பும் ஒன்றேதான். கதை நடக்கும் காலகட்டம் 1925. குறிப்பாக மாட்டுப் பண்ணை உரிமையாளர்களாகச் சகோதரர்கள் இருவர். அதில் ஒருவர் ஜார்ஜ் , இரண்டாமவர் பில். இந்த பில் உக்கிரமான ஆசாமி. ஜார்ஜ் , ரோஸ் என்ற பெண்ணை மணத்துக் கொள்கிறான். அவளுக்கு ஒரு மகன் ஏற்கனவே இருக்கிறான். அவன் மருத்துவம் படிக்கிறான். அவன் பெயர் பீட்டர். இந்த இடத்தில் பில் , ரோஸை ஒருவகையான மிரட்டல் தொனியில் கையாளுகிறான். அதாவது உளவியல் ரீதியாகச் சீண்டுதல் எனக் கொள்க. பில்லின் இந்த போக்கு என்ன முடிவைத் தொட்டது என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதி கதை. முதல் விஷயம், மார்வெல் துரித உணவகத்தில் டாக்டர் ஸ்டேர்ஞ்சாக நடித்திருந்த பெனடிக்ட் கம்பெர்பாட்ச் தான் பில் லாக நடித்திருப்பார். கதாபாத்திரத்தில் கச்சிதமாக இருப்பார். வேகமாகப் படம் பார்க்கப் போகலாம் என்று நினைக்கும் ☺️ மார்வெல் பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை நீங்கள் நினைக்கும் அதிர...