மெய் நிகர் உலகம்.
2050 -2100 இந்த காலகட்டத்தில் புவியில் மனித இனம் மிகப்பெரிய இரண்டு பிளவுகளாகப் பிரியும். முதல் இனம் - மெய் நிகர் உலகில் வாழும் மனிதர்கள். இரண்டாம் இனம் - உண்மை உலகில் வாழும் மனிதர்கள். மேட்ரிக்ஸ் மாதிரிதான் ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கும்; மெய் நிகர் (virtual reality world) உலகம் கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் இருக்கும். அதாவது மனிதன் ,மனிதனால் அடிமையாக்கப்பட்டிருப்பான். அதற்குக் காரணம் மெய் நிகர் உலகின் மயக்கத்திற்குப் பலர் அடிமையாக இருப்போம். குறிப்பாக மனிதனின் ஆழ்மனதின் ஆசைகளை ( மிகப் பயங்கரமான , வெளியில் சொல்ல முடியாத) மெய் நிகர் உலகில் நிறைவேற்றிக் கொள்ள கார்ப்பரேட் அனுமதிக்கும். பலர் மெய் நிகர் உலகின் போதையில் கரைந்து போவார்கள். மேலும் கார்ப்பரேட் உண்மை உலகையும் கனிம வள தேவைக்காகச் சிதைக்கும். ஆக உண்மை உலக மனிதர்களின் வாழ்க்கையும் பெரும் போராட்டமாக இருக்கும். இவர்களை கார்ப்பரேட் கட்டுப்படுத்த முயலும். குறிப்பாக மெய் நிகர் உலக வாழ்க்கைக்கு வந்துவிடும்படி நிர்ப்பந்திக்கும். கார்ப்பரேட் முதலைகளில் பலர் இரு உலக வாழ்க...